தாளவாடி அருகே இரவு நேரங்களில் செயல்பட்ட மதுபானக்கடை

74பார்த்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே இரவு நேரங்களில் செயல்பட்ட மதுபானக்கடை

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் பாரதிபுரம் அருகே தமிழக கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள சந்தோஷ் தனியார் மதுபானகடை நள்ளிரவு இரண்டு மணி வரை செயல்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி. தகவலறிந்து சென்ற பத்திரிக்கையாளரிடம், மதுபானக் கடை உரிமையாளர் உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது என ஒருமையிலும் தகாத வார்த்தைகளிலும் பேசியதும், காவல்துறையினருக்கு கையூட்டு அனுப்பி உள்ளேன் எனவும், இரவு 10 மணிக்கு மூட வேண்டிய தனியார் மதுபான கடை இரவு 02. 00 மணி ஆகியும் செயல்பட்டது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னால் அருகில் உள்ள ஸ்ரேயான்ஸ் தனியார் மதுபான கடையில் கத்தியால் சண்டையிட்டுக் கொண்டு குற்றவாளிகள் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அருகாமையில் உள்ள தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லைக்குட்பட்ட காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி