தாளவாடி தொட்டம்தாய் அம்மன் கோயில் விழாவில் குண்டம்

65பார்த்தது
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள நொய்தாளபுரம் கிராமத்தில் தொட்டம்தாய் அம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் தொட்டம்தாய் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் கோயில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து பூசாரி குண்டம் இறங்கினார். இந்த கோயிலில் பூசாரியை தவிர பக்தர்கள் யாரும் குண்டம் இறங்கக்கூடாது என்பது ஐதீகம் என்பதால் பக்தர்கள் குண்டத்தை சுற்றி வந்து தொட்டு கும்பிட்டு வழிபட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி