கோபி: கர்நாடகா மது கடத்தி வந்தவர் கைது

63பார்த்தது
கோபி: கர்நாடகா மது கடத்தி வந்தவர் கைது
கோபி மதுவிலக்கு போலீசார் நேற்று ஆசனூர் செக் போஸ்டில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மதுபாட்டில்களும், பீர் பாட்டில்களும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, காரை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரைச் சேர்ந்த மன்டையா (60) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்

தொடர்புடைய செய்தி