சத்தி அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

57பார்த்தது
சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்து இடதுபுற பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த ஆறு பயணிகள் மற்றும் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் செல்வதற்காக காராச்சிகொரை, தயிர் பள்ளம் வழியாக ஒன்றாம் எண் கொண்ட அரசு டவுன் பேருந்து ஆறு பயணிகளை ஏற்றுக் கொண்டு சத்தியமங்கலம் சென்று கொண்டிருந்தது அப்போது பேருந்து வெள்ளியம்பாளையம் ஜே. ஜே நகர் பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இடதுபுற பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதோடு அருகே உள்ள தோட்டத்திற்குள்ளும் புகுந்தது. இதில் பயணித்த அச்சமடைந்த ஆறு பயணிகள் மற்றும் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

இச்சம்பவத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பேருந்தில் உள்ளவர்களை பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து பவானிசாகர் காவல்துறையினருக்கு பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பவானிசாகர் காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி