காந்தி கல்லூரி மாணவர்கள் தேசிய நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி
சத்தியமங்கலம், விண்ணப்பள்ளி, காந்தி கலை - அறிவியல் கல்லூரி, காந்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நடத்திய தேசிய நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி எஸ்ஆர்டி கார்னரில் தொடங்கியது. கல்லூரி முதல்வர்
வெங்கட்ராமன் தலைமையில், சத்தியமங்கலம் போக்குவரத்து ஆய்வாளர் குருசாமி கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர் பதாகை ஏந்தி சென்றனர். ஊர்வலத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.