பெருந்துறையை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் காசு வைத்து சூதாடிய நான்கு பேரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சூதாட் டம் நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்மந்தப்பட்ட வீட்டில் சோதனையிட்ட போது, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மொசரப்ஷா ஹாஜி (24), டெபாசிஸ் மண்டல் (26), சந்திப் மண் டல் (27), பிப்லாப் மண்டல் (37) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.