ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பெரிய உள்ளேபாளையத்தில் உள்ள துவக்கப்பள்ளியில் குடிநீர் இல்லை என செய்தி வெளியிடப்பட்டது. செய்தியைக் கண்டு அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று நேரில் பார்வையிட்டு பழுதை அகற்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர். குடிநீர் வருவதை வட்டார அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். உடனடியாக பள்ளிக் குழந்தைகளுக்கு குடிநீர் விரைவாக ஏற்பாடு செய்த அதிகாரிகளுக்கு பெற்றோர்களும் குழந்தைகளும் நன்றியைத் தெரிவித்தனர்.