ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா குத்தியாலாத்தூர் கிராமம் பெரிய உள்ளேபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியும் அங்கன்வாடி மையமும் இணைந்து உள்ளது.
இந்தப் பள்ளியில் ஏப்ரல், மே மாதங்கள் விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தண்ணீர் தொட்டி குழாய்கள் உடைந்து சேதமடைந்துள்ளது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் குடிக்கவும் கைகளை கழுவவும் அத்தியாவசியத் தேவைக்கு தண்ணீர் இல்லாமல் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழந்தைகளுக்கு தண்ணீர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இப்பள்ளியில் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. பள்ளி வளாகத்தில் செடிகள் ஏராளமாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியில் உள்ள குறைகளை நீக்கிடவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.