பண்ணாரி மாரியம்மன் கோவிலில்
பக்தர்கள் உண்டியல் காணிக்கை ரூ. 93 லட்சம்
ஈரோடு மாவட்டம்
சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவி லுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக வெள்ளி, செவ் வாய் மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள்.
பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவி லில் 20 இடங்களில் உண்டி யல்கள் வைக்கப்பட்டுள்ளன. மாதம் ஒரு முறை இந்த உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்படும்.
இந்தநிலையில் நேற்று கோவில் செயல் அலுவலர் மேனகா, ஈரோடு அறநிலையத்துறை உதவி ஆணையர் சுகுமார், சத்தியமங்கலம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சங்கர் கோமதி. பரம்பரை அறங் காவலர்கள் புருஷோத்தமன், ராஜமணி தங்கவேல், அமுதா பூங்கொடி, கண்காணிப்பாளர்கள் பாலசுந்தரி, சங்கர் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்
டன. 20 உண்டியல்களிலும் மொத்தம் ரூ. 92 லட்சத்து 82 ஆயிரத்து 46-யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர் மேலும் 437 கிராம் தங்கம், 108 கிராம்வெள்ளியும் இருந்தது.
சத்தியமங்கலம் வெற்றி நர்சிங் கல்லூரி மாணவிகள், வங்கி அலுவலர்கள், தன்னார்வலர்கள், பக்தர்கள், கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.