பெண் ஒருவர் நகையை திருடி செல்லும் சிசிடிவி காட்சி

69பார்த்தது
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே உள்ள நகைக்கடை ஒன்றில் பெண் ஒருவர் நகையை திருடி செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் பகுதியில் ஜெயலட்சுமி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது.

இந்த கடையில் நகை வாங்குவது போல குழந்தையுடன் வந்த ஒரு பெண் ஒருவர் நகைகளை பார்ப்பது போல் நோட்டமிட்டு திடீரென தான் கொண்டு வந்த கவரிங் நகையை வைத்துவிட்டு உண்மையான நகையை தான் கொண்டு வந்த கைப்பையில் மறைத்து திருடி சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர் போலி நகை இருப்பதை கண்டறிந்து தன்னுடைய கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பார்த்தபோது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நகை வாங்க வந்தது போல் நடித்து நகையை திருடி சென்றது தெரிய வந்தது.

இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த நகைக் கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பவானிசாகர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி