ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள பாரதிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் கதிர்வேல் (வயது 22). இவர், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை, பண்ணாரி மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும், ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கிருஷ்ணவேணி, சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் கதிர்வேல் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.