பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 94. 86 அடியாக இருந்தது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளதால் நீர்மட்டம் 95 அடியாக
உயர்கிறது. பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து 3 ஆயிரம் கன அடி வரை உள்ளது. இத னால், கடந்த வாரம் 90 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று இரவு நிலவரப்படி 94. 26 அடியாக உயர்ந்தது. 24. 9 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இன்று (சனி) மாலைக்குள் 95 அடியாக
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று (4ம் தேதி) அதிகாலை 3167 கன அடி, காலை 3054 கன அடி, மதியம் 3096 சுள அடி, மாலை 3156 கன அடி. இரவு 1896 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து எல்பீபி வாய்க்காலில் 5 கன அடி, அரக்கன்கோட்டை- தடப்பள்ளி பாசனத்திற்கு 800 கன அடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 350 கன அடி, குடிநீருக்கு 100 கன என மொத்தம் அணையிலிருந்து 1255 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பவானி, மற்றும் மாயாற்றில் தொடர்ந்து நீர்வரத்து இதேஅளவு இருந்தால் விரைவில் நீர்மட்டம் 100 அடியை எட்டும் வாய்ப்பு உள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.