பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் ரூ. 82 இலட்சம் ம்வசூல்

83பார்த்தது
பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 82 லட்சத்து 20 ஆயிரத்து 260 வசூல்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்தக் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்தக் கோயிலை சுற்றி ஏழுமலை உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. உண்டியலில் பக்தா்கள் காணிக்கை செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படும்.

அதன்படி இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.

பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையா் மேனகா, பரம்பரை அறங்காவலா்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் ரூ. 82 லட்சத்து 20 ஆயிரத்து 260 ரொக்கம், 388 கிராம் தங்கம், 527 கிராம் வெள்ளி நாணயங்கள் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி