சத்தியில் அதிமுகவினர் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்

72பார்த்தது
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவியர், வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய திமுக மாடல் அரசை கண்டித்தும், கைதான ஞானசேகரன் செல்போனில் சார் சார் என யாரிடம் பேசினார் என்பதை காவல்துறையினர் மறைப்பதாக கூறியும், 'யார் அந்த சார்? ' சேவ் யுவர் டாட்டர் என்ற கோஷத்துடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி முன்னிலையில் புதிய பஸ் நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தொடர்புடைய செய்தி