தாளவாடியில் மக்காச்சோளத்தை தின்று தீர்த்த காட்டு யானை.

77பார்த்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் மக்காச்சோளத்தை தின்று தீர்த்த காட்டு யானை.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவரது விவசாய நிலத்தில் நுழைந்த காட்டு யானை மக்காச்சோளத்தை மூடி இருந்த தார்பாய்களை கிழித்து மக்காச்சோளத்தை தின்று தீர்த்தது. இதைக்கண்ட விவசாயிகள் அங்கிருந்து "போ சாமி போ" என கூச்சலிட்டு விரட்டியும் அது செல்லாமல் அங்கேயே மக்காச்சோளத்தை திண்று கொண்டிருந்தது. விவசாயிகளின் சுமார் 2 மணி நேர கூச்சலுக்கு பின் வனப்பகுதிக்குள் காட்டு யானை சென்றது. இந்த வீடியோ தற்போது தாளவாடி பகுதியில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி