சத்தி அருகே சீட்டாட்டம் ஆடிய 6 பேர் கைது

1543பார்த்தது
சத்தி அருகே சீட்டாட்டம் ஆடிய 6 பேர் கைது
சத்தி அருகே சீட்டாட்டம் ஆடிய 6 பேர் கைது

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அடுத்துள்ள புதுக்குய்யானூர், வாட்டர் டேங்அருகே பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபடுவதாக சத்தியமங்கலம், போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சீட்டாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ராசு (40), பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த முகிலன் (34), தயாளன் (32), புது வடவள்ளியைச் சேர்ந்த கருப்பன் (35), பவானிசாகர் பசுவா பாளையத்தைச் சேர்ந்த ஏவி (44), வெள்ளியம்பாளையம்புதூரைச் சேர்ந்த சுரேஷ் (42) ஆகிய 6 பேரை பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் அனைவரையும் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டு கட்டு பண்டல், பணம் 40 ஆயித்து 190 ரூபாய் மற்றும் ஒரு ஸ்கூட்டர் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி