சத்தியமங்கலம் நவபாரத் ரேங்க் பள்ளியல் 16வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. பிரபல திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின் மாணவர்களிடம் பேசுகையில் நான் எடுத்த சுந்தரகாண்டம் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு சண்முகமணி என பெயர் சூட்டியிருப்பேன் அந்தப் பெயர் என்னுடைய ஆசிரியருடைய பெயர் அவர்கள் நியாபகார்த்தமாக இந்த பெயரை சூட்டினேன் , மாணவர்களும் தங்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை மறக்கக்கூடாது என்றார். முதல்வர் ரவி கிருஷ்ணா ஆண்டு அறிக்கை வாசித்தார். பள்ளி தாளாளர்கள் அனைவரையும் வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவிகள் கண்கவர் நடனம் நடைபெற்றது. விழாவில் எக்ஸ். எம்எல்ஏ தர்மலிங்கம், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.