அம்மாபேட்டை அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை குடும்ப தகராறில் விபரீதம்.
கோவை மாவட்டம் விளக்குறிச்சியைச் சேர்ந்தவர் முனியாண்டி (36). இவர் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள நெருஞ்சிப்பேட்டையைச் சேர்ந்த அண்ணாதுரையின் மகள் அகல்யாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இத்தம்பதியினர், நெருஞ்சிப்பேட்டையில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். முனியாண்டிக்கும், அகல்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை நெரிஞ்சிப்பேட்டை படகுதுறை அருகே முனியாண்டி தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து முனியாண்டியின் தந்தை மணி (70) கொடுத்த புகாரின் பேரில், அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.