பெருந்துறையை அடுத்த வரப்பாளையம், எம். சாணார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (39). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2023ம் ஆண்டு சாராயம் காய்ச்சிய போது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் வெளியே வந்த மாரிமுத்து மேலும் 2 முறை சாராயம் காய்ச்சிய வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சாராயம் காய்ச்சி வந்ததால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரி ஈரோடு எஸ்பி ஜவகர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, குண்டர் தடுப்பு சட்டத்தில் மாரிமுத்துவை கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பெருந்துறை சிறையில் உள்ள மாரிமுத்து மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.