ஈரோடு: கிணற்றில் குதித்து தற்கொலை

65பார்த்தது
ஈரோடு: கிணற்றில் குதித்து தற்கொலை
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த அய்யம்பாளையத்தைச் சேர்ந்த நஞ்சம்மாள் (70). மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகன் பழனிசாமி, அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று (மார்ச் 18) காலை 6 மணியளவில், அப்பகுதியில் உள்ள கிணற்றில் நஞ்சம்மாள் சடலமாக மிதந்த நிலையில் இருந்துள்ளார். தகவலறிந்து வந்த புளியம்பட்டி போலீசார், சடலத்தை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பழனிசாமி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி