பாசூரில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி; ரயில் சேவைகளில் மாற்றம்

53பார்த்தது
பாசூரில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி; ரயில் சேவைகளில் மாற்றம்
பாசூர் ரயில்வே யார்டில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வருகிற 7-ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 9-ம் தேதி (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் ரயில் எண் 56809, திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் 7 மற்றும் 9-ம் தேதிகளில் கரூர் ரயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும். இந்த ரயில் திருச்சியில் இருந்து கரூர் வரை மட்டுமே அந்த 2 நாட்களில் இயக்கப்படும். அந்த நாட்களில் கரூரிலிருந்து ஈரோட்டுக்கு இயக்கப்பட மாட்டாது. 

இதேபோல் செங்கோட்டையிலிருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் ரயில் எண் 16846 செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் வருகிற 7 மற்றும் 9-ம் தேதிகளில் கரூர் ரயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும். பாசூரில் பணிகள் முடிந்த பிறகு அந்த நாட்களில் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும். 

ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் 16845 ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் வருகிற 7 மற்றும் 9-ம் ஆகிய இரண்டு நாட்களில் மாலை 3 மணிக்கு கரூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

தொடர்புடைய செய்தி