பவானியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

72பார்த்தது
பவானியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
ஈரோட்டில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பவானி சிறப்பு சர்ப் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார், பவானி மேற்கு தெரு முத்து மாரியம்மன் கோயில் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்திருந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், பவானியைச் சேர்ந்த ரவி ( 50) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 13 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி