பவானி காமராஜ் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் நடந்த கண் சிகிச்சை முகாமை, பவானி நகர்மன்ற தலைவர் சிந்துாரி துவக்கி வைத்தார். கண்புரை, நீர் அழுத்த நோய், மாலைக்கண் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு, மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்ட 40 பேர், சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பவானி மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.