பவானி அருகே உள்ள மைலம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் அமைக்க நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
நமக்கு நாமே திட்டத்தில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கலையரங்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நமக்கு நாமே திட்டத்தில், மாணாக்கர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில், மூன்று தொடுதிரை வசதி துவக்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர்கள் சவிதா, சதீஷ்குமார், வக்கீல் விஜயகுமார், பவானி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர், துணைச் செயலாளர் சுரேஷ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி, முன்னாள் கவுன்சிலர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.