தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று (ஜூன் 11) , ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே, வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் அவர், நேற்று மாலை மேட்டூர் செல்வதற்காக ஈரோடு மாவட்டம் பவானி வழியாக சென்ற போது பவானி பழைய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் திமுக கட்சியினர் திரண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாகனத்திலிருந்து இறங்கி சாலையில் சிறிது தூரம் நடந்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினருடன் கைகுலுக்கினார். முதலமைச்சரைக் கண்ட உற்சாகத்தில் பள்ளி மாணவ - மாணவிகள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.