ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி தலைமையில் கட்சியினர் நேற்று முன்தினம் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு அருகே உள்ள சிஎஸ்ஐ சர்ச் முன் கிறிஸ்தவ மக்களிடம் வாக்கு கேட்டு, துண்டு பிரசுரங்களை வழங்கி வந்தனர். அப்போது, அதே இடத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை (தபெதிக) சேர்ந்தவர்கள் எதிராக பெரியார் ஈரோடு மன்னர் என்றும், சீமானை விமர்சித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இதில், ஆத்திரம் அடைந்த நாம் தமிழர் கட்சியினர் தபெதிக வினர் துண்டு பிரசுரங்களை கிழித்தும், அவர்களை தாக்கினர். இதில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில், காயம்பட்ட தபெதிக வை சேர்ந்த நிர்வாகிகள் ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தபெதிக வை சேர்ந்த ஜாபர் ஈரோடு டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில், நாதக வை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி, பெஞ்சமின், சாலமன், வஹாப் ஆகிய 4 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல், நாதக வை சேர்ந்த சீதாலட்சுமி அளித்த புகாரின் பேரில், தபெதிக வை சேர்ந்த 5 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.