தீயணைப்பு துறையினர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்

666பார்த்தது
தீயணைப்பு துறையினர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்
தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு வாரம் அக்டோபர் மாதத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு பிரச்சார மாரத்தான் இன்று காலை நடைபெற்றது. மாராத்தானை மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மாரத்தான் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை தீயணைப்பு நிலையத்தில் இருந்து துவங்கி, காளைமாட்டு சிலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, சென்னிமலை சாலை வழியாக காசிபாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனைக்கு சென்று, பின்னர், அங்கிருந்து மீண்டும் ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் நிறைவடைந்தது. இந்த மாரத்தானில் உதவி மாவட்ட அலுவலர்கள் முருகேசன், கலைச்செல்வன், தீயணைப்பு துறையை சார்ந்த வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி