ஈரோடு மாவட்டத்தில் குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது

68பார்த்தது
ஈரோடு மாவட்டத்தில் குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது
ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தலின் பேரில், மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புளியம்பட்டி கலைஞர் வீதியில் உள்ள மளிகை கடையில், புளியம்பட்டி போலீசார் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் விக்னேஷ் (31) என்பவரை கைது செய்தனர். 

இதேபோன்று, கோபிச்செட்டிபாளையத்தை அடுத்த அண்ணா நகர் வெள்ளன்கோவிலைச் சேர்ந்த பால்ராஜ் (53) என்பவரது கடையில் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த சிறுவலூர் போலீசார், அவரை கைது செய்தனர். வீரப்பன்சத்திரத்தில் பெட்டி கடை ஒன்றில் குட்கா பொருட்களை விற்பனை செய்த, அதேப்பகுதியைச் சேர்ந்த குழந்தைசாமி (69) என்பவரை கைது செய்த ஈரோடு வடக்கு போலீசார், அவரிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி