அந்தியூர் - Anthiyur

புளியம்பட்டி வாரச்சந்தையில் கால்நடை ரூ. 1. 50 கோடிக்கு விற்பனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் வியாழக்கிழமை தோறும் கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இதற்கு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்கு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று(அக்.17) நடந்த சந்தைக்கு, 50 எருமைகள், 200 கலப்பின மாடுகள், 70 கன்றுக்குட்டிகள், 350 ஜெர்சி ரக மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எருமைகள் 15 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையும், கருப்பு வெள்ளை மாடு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையும், ஜெர்சி 20 ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரையும், சிந்து 15 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையும், நாட்டு மாடு 70 ஆயிரம் ரூபாய் வரையும், வளர்ப்பு கன்றுக்குட்டிகள் 5 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా