ஈரோடு வீரப்பன் சத்திரம் குழந்தையம்மாள் வீதியை சேர்ந்த செந்தில் மகள் தீபா(21). இவரது பெற்றோர் இறந்து விட்டதால் தாத்தா மருதமுத்து, பாட்டி அங்கம்மாளுடன் வசித்து வந்தார். தீபா அடிக்கடி வரும் தலைவலியால் அவதிபட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் குணமாகததால் கடந்த 2ம் தேதி இரவு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த தீபாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு தீபா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீபாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.