ஈரோட்டில் இன்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று மட்டும் 10 பணிகள் ரூ. 3 கோடியே 65 லட்சம் செலவில் தொடங்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பணிகள் முடிந்து அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர இருக்கிறோம். ஏற்கனவே துணை முதல் - அமைச்சர் ஈரோடு வந்த போது 13,000 பேருக்கு ஒரே இடத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டும், திறந்து வைக்கப்பட்டது. அதேபோல் முதல்-அமைச்சர் ஈரோடு வந்தபோது 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. சிக்கையா நாயக்கர் கல்லூரி என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ் அகாடமி விளையாட்டு அரங்கம் மிகப்பெரிய நூலகம் வரவேண்டும். இதையெல்லாம் முதல்-அமைச்சர் சொல்லி இருக்கிறார். இதுபோன்று பல நூறு திட்டங்களை அறிவித்திருக்கிறார். அதற்கான பணிகளை அதிகாரிகள் வேகமாக மேற்கொண்டு வருகிறார்கள் என்று கூறினார்.