புன்செய் புளியம்பட்டி: சபரிமலை பக்தர்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான அன்னதான பொருட்கள்

61பார்த்தது
புன்செய் புளியம்பட்டி: சபரிமலை பக்தர்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான அன்னதான பொருட்கள்
சபரிமலை சன்னிதானத்தில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வழங்கப்படும் மளிகை பொருட்களை பண்ணாரி அம்மன் அன்னதான அறக்கட்டளை பக்தர்கள் ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான அன்னதான பொருட்களையும் அரிசி துவரம் பருப்பு சுண்டல், கரும்பு சர்க்கரை மற்றும் இதர காய்கறி பொருட்கள் என மொத்தம் ரூபாய் 18 லட்சம் மதிப்பிலான பொருட்களை நேற்று டிசம்பர் 22ஆம் தேதி அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி