பெருந்துறை சீலம்பட்டி தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் ஈஸ் வரன், பெருந்துறை பொதுமக்கள் பாது காப்பு அறக்கட்டளை சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய நேற்று மனுவில் கூறியதாவது: பெருந்துறை-பெத்தாம்பாளையம் சாலை, சீலம்பட்டி பைபாஸ் பிரிவில் ஏராளமான விபத்து நடந்து வருகிறது. பல உயிர் சேதம், உடல் ஊனங்கள் ஏற் பட்டுள்ளன.
பெருந்துறையில் இருந்து கவுந்தப் பாடி வரை, 17 கி. மீ. , துாரத்துக்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெருந்துறை வந்து செல்வதும், சிப்காட் வேலைக்கு வருவதால் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின் றனர். தினமும், 1, 000க்கும் மேற்பட்ட
வாகனங்கள் பைபாஸ் சாலையை கடந்து செல்கின்றன. இதனால் விபத்து தவிர்க்க முடியாததாகிவிட்டது. இங்கு விபத்தை தடுக்க, மேம்பாலம் அமைப் பது மட்டுமே சிறந்த வழியாகும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இவ்வி டத்தில் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.