ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மதுவிற்பனையை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், டி. என். பாளையம் பகுதியில் பங்களாபுதூர் போலீசார் நேற்று (ஜூன் 11) ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொரமன் கோயில் பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, அங்கு சென்ற போலீசார், மது விற்பனையில் ஈடுபட்டிருந்த கடையம்பாளையத்தைச் சேர்ந்த முருகனை (55) கைது செய்து, அவரிடம் இருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்