புன்னத்தில் கும்பாபிஷேக விழா

55பார்த்தது
புன்னத்தில் கும்பாபிஷேக விழா
பவானி அருகே உள்ள புன்னம், செல்லிங்கம்பாளையம் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செல்வ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 வருடங்களானதால், மீண்டும் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு, கோயில் புதுப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 19-ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் வழிபாடுகள் தொடங்கின.
இரு நாட்களுக்கு முன், பவானி கூடுதுறையிலிருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தக் குடங்கள் எடுத்தபடி, ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் மற்றும் முதற்கால யாக வேள்வி பூஜைகள் நடந்தன.
இரண்டாம் கால யாக வேள்வி நேற்று காலை முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீ செல்வ மாரியம்மன், ஸ்ரீ பாலமுருகன் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக விழாவை, வேத ஆகம முறைப்படி ஸ்ரீ முகுந்தராமானுஜ பட்டர் தலைமையிலான குழுவினர் நடத்தி சிறப்பு அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி