நகர குழு, ஒன்றிய குழு கூட்டம்

69பார்த்தது
நகர குழு, ஒன்றிய குழு கூட்டம்
பவானி சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள், நகரக்குழு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கொண்ட கூட்டு கூட்டம் பெரியமோளபாளையம் மாரியம்மன் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கே. சுப்பராயன் MP அவர்கள் கட்சி அணிகளை பலப்படுத்துவது குறித்து உரையாற்றினார். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் எஸ். மோகன்குமார் பங்கேற்று வழிகாட்டினார். மாநில குழு உறுப்பினர் டி. ஏ. மாதேஸ்வரன் தலைமை வகித்தார். நகர செயலாளர் ப. மா. பாலமுருகன் நோக்கவுரையாற்றினார். ஒன்றிய செயலாளர் வி. ஜி. அருள் நன்றியுரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கே. சந்திரசேகர், எஸ். கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் எல். சிவராமன், எம். ஆர். சுரேஷ்குமார் , தி. கண்ணன், எம். தங்கராஜ் உள்ளிட்ட நகர, ஒன்றிய இடைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி