வாக்களிப்பதின் அவசியம் என்ற தலைப்பில், அந்தியூர் அரசு கலைக் கல்லுாரியில், சுவர் இதழ் போட்டி இன்று நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்களிப்பதின் அவசியம் என்ற தலைப்பில், சுவரொட்டி வடிவிலான சுவர் இதழ் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லுாரியின் முதல்வர் முனைவர் பொன்னுசாமி தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார். இந்த போட்டியில் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஆங்கிலத்துறைத் தலைவர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.