காதலியுடன் சேர்த்து வைக்கக் கோரி வாலிபர் போராட்டம்

52பார்த்தது
காதலியுடன் சேர்த்து வைக்கக் கோரி வாலிபர் போராட்டம்
பவானி தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த 21 வயது வாலிபர் நேற்று பவானி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பாக நின்றிருந்தார். அவர், கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த கல்லூரி மாணவியை, அவரது பெற்றோர் வேறொருவருக்கு திருமணம் செய்து வைப்பதாகக் கூறியுள்ளார்.
அப்போது, காதலியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு ஆவேசத்துடன் கூறிய வாலிபர் கைகளில் ரத்தம் சொட்டு சொட்டாக வடிந்தது. இந்த நிலையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற வாலிபரை, அங்குள்ள பெண் போலீசார் பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது, அங்கிருந்த இரும்பாலான ரோடு டிவைடர் மீது தனது தலையால் பலமாக மோதினார். இதில், முன்பக்க மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. முகம் முழுவதும் ரத்தம் வடிந்த நிலையில் தனது காதலியை சேர்த்து வைக்குமாறு தொடர்ந்து போலீசாரிடம் வலியுறுத்தினார்.
இதனை அவ்வழியே சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்க்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வழியே சென்ற ஆண் போலீசார் இச்சம்பவத்தைக் கண்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.
தொடர்ந்து, அவ்வாலிபர் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி