ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாளவாடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாளவாடி சி ஹெச் நகர் ரோடு, சோதனை சாவடி அருகே ஒரு நபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடகா மாநில மதுவை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 12 மது பாக்கெட்களை அறிமுக செய்தனர். விசாரணையில் அவர் தாளவாடி அடுத்த திகினாரை, அம்பேத்கர் தெருவை சேர்ந்த பசுண்ணா (38) என்ன தெரிய வந்தது.
இது குறித்து தாளாவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து பசுண்ணாவை கைது செய்தனர். இதைப்போல் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது சித்தோடு அடுத்த வாய்க்கால் மேடு பகுதியில் அரசு அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதி சேர்ந்த மோகனசுந்தரம் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.