ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 05-ல் நடைபெறும் நிலையில் வாக்காளர்களுக்கு, வார்டு வாரியாக பூத் சிலிப் வழங்கும் பணி நேற்று (ஜன. 28) தொடங்கியது. தொகுதியில் 53 இடங்களில், 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. களத்தில் திமுக, நாதக என 46 வேட்பாளர்கள், 852 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன.