ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்.5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் திமுக, நாதக உள்பட ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று நிறைவுபெற்றது. இதில் 55 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டிருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்துள்ளார். 65 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த நிலையில் 3 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பட்டுள்ளது.