ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோட்டில் இன்று (ஜன., 04) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மறைந்த முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு வழங்கவும் காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தியுள்ளது.