2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியால் 10 இடங்களைக் கூட பிடிக்க முடியாது என பெங்களூரு புகழேந்தி பேட்டியளித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, "நாளை முதல் பிரசாரத்தை மேற்கொள்ளும் இபிஎஸ், தனது கொடியில் உள்ள அறிஞர் அண்ணாவை நீக்கிவிட்டு அமித்ஷாவையோ மோடியையோ போட்டுக்கொள்ள வேண்டும். திராவிட இயக்கத் தலைவர்களை அசிங்கப்படுத்திய அவமானப்படுத்திய கட்சிக்குப் பின்னால் செல்வது அசிங்கமாக இல்லையா?" என்று கூறியுள்ளார்.