உங்கள் கூட்டணியில் இணைய தவெக கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “திமுகவை எதிர்க்கும் அனைத்து ஒத்த கருத்துடைய கட்சிகளை இணைந்து தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். திமுகவை அகற்றப்பட வேண்டும் என எண்ணுபவர்களுடன் கூட்டணி வைப்பதில் மகிழ்ச்சி. அவர்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கருத்து” என்று தெரிவித்துள்ளார்.