சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கவர்னர் ஆர்என் ரவியை அதிமுக., பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். இந்த சந்தித்த போது, அதிமுக.,வின் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இந்த சந்திப்பில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு மற்றும் சமீபத்தில் பறிமுதலான போதைப்பொருட்களின் விவரங்கள் குறித்த பட்டியலை கவர்னரிடம் இ.பி.எஸ்., வழங்கியதாக தெரிகிறது.