எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலர் கலராக ரீல் விடுகிறார் என அமைச்சர் ரகுபதி கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஒரு பேச்சோ, எழுத்தோ அதிமுக பதிவு செய்திருக்கிறதா? அதனைக் கேள்வி கேட்டால், 'அமித் ஷாவிடம் பேசினேன். ஒன்றிய அரசிடம் குரல் கொடுத்தேன்' என கலர் கலராக ரீல் விடுகிறார் இபிஎஸ். பாஜகவோடு கூட்டணி வைத்துக் கொண்டு இதை எதிர்ப்பேன் என்கிறாரே, இதுதானே உலக மகா உருட்டு" என்று தெரிவித்துள்ளார்.