அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடலாம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால், இரட்டை இலை யாருக்கு? என ஆணையம் முடிவெடுக்கும். இதனிடையே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இபிஎஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.