சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருக்கு இபிஎஸ் வாழ்த்து

58பார்த்தது
சவால்களை எதிர்கொண்டு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், சுனிதா வில்லியம்ஸ், புட்ச்வில்மோரின் அர்ப்பணிப்புக்கு வணக்கம். சவால்களை எதிர்கொள்ளும் வகையில், விண்வெளியில் 9 மாதங்கள் போராடி பூமி திரும்பியுள்ளீர்கள். குறிப்பாக சுனிதா தைரியம் மற்றும் தன்னம்பிக்கையால் மெய் சிலிர்க்க வைக்கிறார். உங்கள் வாழ்வு பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி