அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பதிவில், நாமக்கல்லில் சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மாநிலத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் ஸ்டாலின் மாடல் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை. மேற்கு மாவட்டங்களில், தோட்டத்து வீடுகளில் விவசாயிகளை குறி வைத்து நடத்தப்படும் இந்த கொலை- கொள்ளை சம்பவங்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என கேள்வியெழுப்பினார்.