வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்த மனு உச்சநீதிமன்றத்தில் வருகிற 27ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. சேலம் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை கோரியும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு விசாரிக்க உள்ளது.